பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட கார்: ஆவணங்களை சோதனையிட்டபோது... ஒரு சுவாரஸ்ய சம்பவம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் வாகன சோதனயில் ஈடுபட்டிருந்த பொலிசார், கார் ஒன்றை தடுத்து நிறுத்தினர்.

இந்த சம்பவம் Valence என்ற நகரில் நடைபெற்றது. காரின் சாரதியிடம் ஆவணங்களை பொலிசார் கேட்டபோது, அவர் ஆவணங்களைக் கொடுத்தார்.

எல்லாமே சரியாக இருந்ததுபோல் தோன்றினாலும், அதில் ஏதோ பிரச்சினையாக இருப்பதுபோல் தோன்றவே, பொலிசார் ஆவணங்களை கவனமாக ஆராய்ந்தபோது தவறு தெரியவந்தது.

அவர் வைத்திருந்த காப்பீட்டு ஆவணங்களில் காலாவதி திகதி பிப்ரவரி 31, 2021 என்று குறிப்பிடப்பட்டிருந்தது! பின்னர்தான் அவர் ஆவணங்களை போலியாக தயாரித்திருந்ததும், பிப்ரவரியில் 28 அல்லது லீப் வருடங்களில் 29 நாட்கள் மட்டுமே உண்டு என்பதை யோசிக்காமலே பிப்ரவரி 31 என்று போட்டிருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக சாரதியை கைது செய்த பொலிசார், காரையும் பறிமுதல் செய்தார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்