பிரான்சில் இருந்த பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக அகதியாக சென்ற மக்கள்! பரிதாபமாக பலியான நபர்

Report Print Santhan in பிரான்ஸ்
520Shares

பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொண்ட அகதிகளில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுத்து வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.

இந்நிலையில், பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொண்ட அகதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த செவ்வாய் கிழமை Loon-Plage (Nord) நகர்புற கடல் பிராந்தியத்தில் இருந்து சிறிய படகு மூலம் சில அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர். ஆங்கில கால்வாய் ஊடாக அமைந்த இந்த பயணம் நடுவழியில் பெரும் ஆபத்தை சந்தித்துள்ளது.

இதனால் படகு கடலுக்கு மூழ்கியதால், உள்ளே இருந்த 18 பேரும், உயிருக்கு போராடியுள்ளனர். இதைக் கண்ட ரோந்து பணியில் இருந்து கட்ற்பிராந்திய அதிகாரிகள், அவர்களை மீட்டுள்ளனர்.

இதில், ஒருவரை மட்டும் காணவில்லை, பலத்த மூச்சுத்திணறலுக்கு நடுவில் மீட்கப்பட்ட அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்