மீண்டும் முழு ஊரடங்கு... இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
917Shares

பிரான்சில் ஒரு மாதம் வரையிலாவது முழு ஊரடங்கை அறிவிக்க ஜனாதிபதி திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரான்ஸ் அரசு ஒரு மாத காலத்திற்கு ஊரடங்கை அறிவிக்க திட்டமிட்டு வருவதாகவும், அந்த ஊரடங்கு நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரலாம் என்றும் பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார். அதில் முழு ஊரடங்கா அல்லது உள்ளூர் மட்டத்தில் ஏற்கனவே அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மேக்ரான் அலுவலகம் இது குறித்து கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அப்படியே பிரான்ஸ் முழுவதும் முடக்கப்பட்டாலும், அது மார்ச்சில் அறிவிக்கப்பட்டது போன்ற கடும் கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்காக இல்லாமல், தளர்வுகள் கொண்டதாகத்தான் இருக்கும் என்றும் அந்த தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி பிரான்சில் பெருமளவில் கொரோனா பரவல் காணப்பட்டதுடன், 24 மணி நேரத்தில் 523 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

ஏப்ரலிலிருந்து கணக்கிடும்போது, தினசரி மரண எண்ணிக்கையில் இதுதான் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்