பிரான்ஸ் இரண்டாவது தேசிய ஊரடங்கு: ஜனாதிபதி அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
628Shares

மீண்டும் பிரான்சில் தேசிய ஊரடங்கை அறிவித்தார் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.

கொரோனாவின் இரண்டாவது அலை முதலாவது அலையை விட பயங்கரமாக இருக்கும் என்பதால், அதை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால், 400,000 பேர் வரை உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்றார் அவர்.

ஊரடங்கின் முக்கிய அம்சங்களாவன:
  • அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லலாம்.
  • அப்படி வெளியே செல்பவர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்கவேண்டும்.
  • வீட்டை விட்டு வெளியே செல்பவர்களை பொலிசார் சோதனையிடுவார்கள்.
  • மதுபான விடுதிகளும் உணவகங்களும் மூடப்படும்.
  • அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அலுவலகங்கள் தவிர மற்றவை மூடப்படும்.
  • முதியோர் இல்லங்களுக்கு சென்று உறவினர்களை காண அனுமதி உண்டு.
  • ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள எல்லை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

ஆனால், பள்ளிகள் செயல்படும் என்று கூறியுள்ள ஜனாதிபதி மேக்ரான், அவை மூடப்படுவதால் மாணவர்களுக்கு பாதிப்பைத்தான் ஏற்படுத்தும் என்றார்.

இந்த இரண்டாவது ஊரடங்கு நாளை முதல் (30.10.2020) அமுலுக்கு வருகிறது, அது டிசம்பர் மாதம் 1ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்