பிரான்ஸ் தேவாலயம் மீது தீவிரவாத தாக்குதல்... ஒருவர் பலி பலர் காயம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
286Shares

சற்று முன் பிரெஞ்சு நகரமான Niceஇல் தீவிரவாத தாக்குதல் ஒன்றில் ஒருவர் பலியானதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை உள்ளூர் நேரப்படி 9 மணியளவில், Nice என்ற பிரெஞ்சு நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

உடனடியாக அங்கு விரைந்த பொலிசார், தாக்குதல் நடத்தியவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளார்கள்.

நகர மேயரான Christian Estrosi, பொலிசார் தாக்குதல்தாரியைக் கைது செய்யும்போது, தான் உடன் இருந்ததாகவும், இது Basilica of Notre-Dame de Nice தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு தீவிரவாத தாக்குதல் என்பதையே அனைத்து செயல்களும் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்