நிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல்! காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை

Report Print Basu in பிரான்ஸ்
606Shares

நிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சில நிமிடங்களில் சவுதியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சில நிமிடங்களில் பிரான்சின் தெற்கே உள்ள அவிக்னனில் தாக்குதல் நடந்தது.

அவிக்னனில் மர்ம நபர் ஒருவன் ‘அல்லாஹு-அக்பர்’ என்று கூச்சலிட்டு பல பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கத்தியால் தாக்குதல் நடத்த முயன்றார்.

ஆனால், பொலிஸ் அதிகாரிகள் அவனை சுட்டுக் கொன்றுள்ளனர். கொரோனாவுக்கு மத்தியில் நிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3 தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ள பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்