பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், நாட்டில் தேவாலயங்கள் போன்றவைகளை பாதுகாக்க, துருப்புகள் அதிகப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
நைஸில் நடந்த கத்தித் தாக்குதலில் தொடங்கி மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பயங்கரவாததுடன் தொடர்புடையதாக அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஜனாதிபதி மேக்ரான், நாங்கள் தாக்கப்பட்டால், அதற்கு காரணம் நமது மதிப்புகள், சுதந்திரத்தின் மதிப்புகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு அடிபணியக்கூடாது போன்றவையாக தான் இருக்கும்.
தேவாலயங்கள் உட்பட வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை முடுக்கிவிட்டு, பிரெஞ்சு பிரதேசத்தில் படையினரை நிலைநிறுத்த வேண்டும்.
பிரெஞ்சு குடிமக்களுக்கும் கத்தோலிக்க சமூகத்திற்கும் ஆதரவு மற்றும் ஒற்றுமை குறித்து உறுதிமொழி அளிப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.
மேலும், தற்போது ரோந்துப் பணியில் இருக்கும் துருப்புக்களின் எண்ணிக்கையை 3,000 முதல் 7,000 வரை உயர்த்தப் போவதாகவும், பள்ளிகளில் கூடுதல் பாதுகாப்பு இருக்கும் என்றும் தெரிவித்தார்.