பிரான்சில் நடந்த பயங்கரம்! தலை துண்டித்து கொல்லப்பட்ட நபர் இவர் தான்: தாக்குதல்தாரி நாட்டிற்குள் நுழைந்தது எப்படி என தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்
931Shares

பிரான்சில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், மூன்று பேர் உயிரிழந்த நிலையில், அதில் உயிரிழந்த ஒருவரின் புகைப்படம் மற்றும் தாக்குதல்தாரி குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் Nice-ல் உள்ள Notre Dame basilica என்ற தேவாலயத்தில் திருப்பலி தொடங்கிய உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு, திடீரென்று உள்ளே நுழைந்த நபர் அங்கிருந்த எல்லோரையும் கத்தியால் தாக்கினார்.

அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டபடியே அங்கிருந்தவர்களை, தாக்க இதில், ஆண் மற்றும் பெண் இருவரின் தலை துண்டிக்கப்பட்டதுடன், மற்றொரு பெண் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டையே உலுக்கியுள்ளது. ஏனெனில் பிரான்சில் தீவிரவாதி ஒருவனால் ஆசிரியரான Samuel Paty என்பவர் தலை வெட்டபட்டு கொல்லப்பட்டு 13 நாட்களே ஆன நிலையில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளதால், நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இதன் காரணமாக ஜனாதிபதி மேக்ரான் தேவாலயங்கள், பள்ளிகள் போன்ற மக்கள் கூடும் முக்கியமான இடங்களின் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளார்.’

இந்நிலையில், இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த மூன்று பேரில் ஒருவரின் பெயர் Vincent Loques(45) என்பது தெரியவந்துள்ளது. இவர் குறித்த தேவாலயத்தில் மிகவு அர்பணிப்புள்ள ஊழியராக இருந்து வந்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து உயிரிழந்த 60 வயது மதிக்கத்தக்க பெண்ணிற்கு தொண்டையில் பலமாக காயம் ஏற்பட்டிருந்ததாகவும், அவரின் தலை துண்டிக்கப்பட்டு கிழே கிடந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழக்க, 44 வயது பெண் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

உயிரிழந்த Vincent Loques-ன் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. அதில் சிரித்த முகத்துட்ன இருக்கும் இவர், பத்து ஆண்டுகளாக தேவாலயத்தில் வார்டனாக இருந்தார் என்றும் விரிவான மற்றும் அனுதாபம் கொண்டவர் என்றும் திருச்சபையின் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

மேலும், தக்குதல் நடத்திய தாக்குதல் தாரி வடக்கு ஆப்பிரிக்காவின் Tunisian-வை சேர்ந்தவன், அகதியான இவன், கடந்த 1999-ஆம் ஆண்டு பிறந்தவன்.

இவன் குறித்த நகரத்திற்கு இரயில் மூலம் வந்திறங்கிறங்கியுள்ளான். அதன் பின் தேவாலயத்தில் இருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் உடைகளை மாற்றி, உள்ளே நுழைந்துள்ளான்.

இத்தாலியில் இருந்து பிரான்சிற்குள் இவன் நுழைந்துள்ளான். கடந்த அக்டோபர் 9-ஆம் திகதி அன்று தெற்கு இத்தாலிய நகரமான பாரி வழியாக பயணம் செய்துள்ளான்.

இவனிடம் இத்தாலிய செஞ்சிலுவை சங்க அடையாள ஆவணம், மற்றும் பயன்படுத்தப்படாத இரண்டு கத்திகள் அடங்கிய ஒரு பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்