பிரான்ஸ் தேவாலயத்தில் தீவிரவாதியால் கொல்லப்பட்ட பெண்ணின் கடைசி வார்த்தைகள்: புகைப்படமும் வெளியானது

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சிலுள்ள நைஸ் நகரில் தீவிரவாதியால் கொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணின் கடைசி வார்த்தைகளும் அவரது புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

நேற்று காலை நைஸ் நகரிலுள்ள தேவாலயத்தில் திருப்பலி துவங்கும் நேரத்தில் ஆலயத்திற்குள் நுழைந்த Brahim Aoussaoui என்னும் துனீசியா நாட்டைச் சேர்ந்த நபர் கத்தியால் அங்கிருந்தவர்களை கொடூரமாக தாக்கியுள்ளான்.

அவனால் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் Simone Barreto Silva (44) என்ற பெண்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த Simone, 30 ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்துவந்துள்ளார், அவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

கத்தியால் பலமுறை குத்தப்பட்டாலும் Simone தேவாலயத்திலிருந்து தப்பி, அருகிலுள்ள காபி ஷாப் ஒன்றிற்கு சென்றுவிட்டிருக்கிறார்.

அவருக்கு உதவச் சென்ற மருத்துவ உதவிக்குழுவினரிடம், கடைசியாக உயிர் பிரிவதற்கு முன், என் பிள்ளைகளிடம், நான் அவர்களை நேசிக்கிறேன் என்று சொல்லிவிடுங்கள் என்று கூறியிருக்கிறார் Simone. அதுதான் Simone கடைசியாக பேசிய வார்த்தைகள்...

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்