பிரான்ஸ் மண்ணில் மேலும் தீவிரவாத தாக்குதல்கள் நிகழக்கூடும்! உள்துறை அமைச்சர் கருத்தால் பரபரப்பு

Report Print Basu in பிரான்ஸ்
141Shares

பிரான்ஸ் இஸ்லாமிய சித்தாந்தத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளதால் நாட்டில் மேலும் தீவிரவாத தாக்குதல்கள் நிகழக்கூடும் என்று உள்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நகரமான நைஸில் உள்ள தேவாலயத்திற்குள் நுழைந்த துனிசியாவை சேர்ந்த நபர் ஒருவன், ஒரு பெண்ணின் தலை துண்டித்து கொன்று, மேலும் இரண்டு பேரை கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நாம் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் எதிரிக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளோம் என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் கூறினார்.

இதனால் பிரான்ஸ் மண்ணில் மேலும் தாக்குதல்கள் நிகழக்கூடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

துருக்கி ஜனாதிபதியின் எர்டோகனின் சமீபத்திய கருத்துகள் எற்றுக்கொள்ள முடியாத வகையில் இருந்தது.

முகமது நபியின் கார்ட்டூன்களை நான் விரும்பவில்லை, ஆனால் அவற்றை வெளியிடுவதற்கான உரிமையை நான் ஆதரிக்கிறேன் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் டர்மனின் கூறினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்