பிரான்ஸ் தாக்குதலில் புதிய திருப்பம்: இரண்டாவது நபர் கைது! வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in பிரான்ஸ்
577Shares

பிரான்சின் Nice தாக்குதல் தொடர்பில் காவல்துறையினர் இரண்டாவது நபரை கைது செய்துள்ளதால் இந்த தாக்குதல் மிகவும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற பயத்தை அதிகரித்துள்ளது.

Nice தேவாலய தாக்குதலில் ஈடுபட்ட துனிசியாவைச் சேர்ந்த 21 வயதான Brahim Aoussaoui-யின் கூட்டாளி என சந்தேகிக்கப்படும் இரண்டாவது நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 47 வயதான சந்தேக நபர், தீவிரவாதி Brahim Aoussaoui-க்கு மொபைல் போன் வழங்கியதாக நம்பப்படுகிறது.

Niceல் தீவிரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 47 வயதான சந்தேக நபர் மீது தீவிரவாதிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் தொடர்பில் காவல்துறையினர் இரண்டாவது நபரை கைது செய்தபின், இத்தாக்குதல் தனி நபர் தீவிரவாத தாக்குதல் அல்ல மற்றும் மிகவும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற பயம் அதிகரித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்