பிரான்சில் சர்ச்சைக்குரிய கன்னித்தன்மை சோதனைக்கு தடை விதிக்க முடிவு... தடைக்கும் உருவானது எதிர்ப்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் ஒன்றில் உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கன்னித்தன்மை சான்றிதழ் என்ற விவகாரத்தைக் குறித்து ஒரு அறிக்கை விட்டார்.

பிரான்சில், திருமணம் செய்வதற்கு, ஒரு பெண்ணுக்கு கன்னித்தன்மை சான்றிதழ் பெற அவசியமில்லை என்றார் மேக்ரான்.

பல நாடுகளில் இந்த கன்னித்தன்மை சோதனை என்னும் வழக்கம் நடைமுறையில் உள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு, அது மனித உரிமை மீறல் என்றும்,

அந்த பரிசோதனைக்குட்படுத்தப்படும் பெண்களுக்கு மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளதோடு,

ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாளா இல்லையா என்பதை பரிசோதனை மூலம் நிரூபிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த மாதம், கன்னித்தன்மை சோதனைக்கு தடை விதிப்பது குறித்த மசோதா நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட உள்ளது.

அந்த சோதனை செய்யும் மருத்துவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், 15,000 யூரோக்கள் அபராதம் விதிக்கும் திட்டமும் உள்ளது.

இதற்கிடையில், பிரான்சிலும் மருத்துவர்களும், இஸ்லாமிய பெண்ணியவாதிகளும் கன்னித்தன்மை சான்றிதழ் என்ற விடயத்தை எதிர்த்தாலும், சிலர், கன்னித்தன்மை சோதனைக்கு தடை விதிப்பது பெண்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும், சிலர், மேக்ரான் இந்த விடயத்தை அரசியலாக்குவதாகவும் வாதிடுகின்றனர்.

அதாவது, சில சமுதாயங்களில் இந்த கன்னித்தன்மை சான்றிதழை அளிக்க இயலாத நிலையில் பெண்கள் பிரச்சினைகளை சந்திப்பதாகவும், அப்படிப்பட்ட சூழலில் அத்தகைய பெண்களுக்கு இந்த சான்றிதழ்கள் உதவியாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார் Nta Rajel என்னும் பெண்ணியவாதி.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்