பிரான்சில் அத்தியாவசியமற்ற பொருட்களிற்கான கடைகள் எப்போது திறக்கலாம்? வெளியான தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் சிறுகடைகள், மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களிற்கான கடைகளையும் பெரும் வர்த்தக நிலையங்களையும் திறப்பதற்கான பேச்சுவார்தை, அரசின் நிர்வாக மட்டத்திற் இடையிலும், வரத்தக சங்கங்களின் உயர் மட்டத்திற்கு இடையிலும் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்சில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 12-ஆம் திகதியில் இருந்து, பகுதி நேரமாகக் கடைகளைத் திறப்பதென்றும். ஒவ்வொரு 10 மீற்றர் இடைவெளிகளில் மட்டும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களை உள்ளெடுப்பதென்றும், முன்னரே பதிவு செய்து, அதன் பின்னரே வாடிக்கையாளர்கள் கடைக்கு வரமுடியும் என்றும் பல திட்டங்கள் வர்த்தக சங்கங்களால் முன் வைக்கப்பட்டன.

ஆனால் இந்தத் திட்டங்கள் அனைத்தும் எந்த விதமான விவாதங்களிற்கும் இடமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாத ஆரம்பத்தில், கொரோனாத் தொற்றின் பரவல் குறைவடைந்தால், கடைகள் திறப்பது பற்றி ஆலோசிக்கலாம் என, பிரதமரும், சுகாதார அமைச்சரும் தி;ட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்