ஆறு வயது சிறுவன் ஒருவனுக்கு பிரான்ஸ் அளித்துள்ள கௌரவம்: இரண்டாம் உலகப்போரின்போது அவன் என்ன செய்தான் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

இரண்டாம் உலகப்போரின்போது வீர மரணம் அடைந்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சிகளை இந்த வாரம் பிரான்ஸ் நடத்தி வரும் நிலையில், ஆறு வயது சிறுவன் ஒருவனுக்கும் போர்வீரர்களுக்கு இணையான கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.

Quinquin என்ற பெயரால் அழைக்கப்படும் Marcel Pinte என்ற அந்த ஆறு வயது சிறுவனின் பெயர், இன்று Aixe-sur-Vienne என்ற இடத்திலுள்ள போர் நினைவிடத்தில் பொறிக்கப்பட உள்ளது.

பிரான்சின் இளம் இரண்டாம் உலகப்போர் ஹீரோ என புகழப்படும் அளவுக்கு அவன் என்ன செய்துவிட்டான்? Marcelஇன் தந்தையான Eugène ஒரு படைத்தளபதி.

எப்போதும் போர்வீரர்களுடனேயே நேரத்தை செலவிடும் Marcelக்கு அவர்களுடைய சங்கேத வார்த்தைகள் எல்லாம் தெரியும்.

அதீத நினைவாற்றல் கொண்ட Marcel, தனது சட்டைக்குள் முக்கிய செய்திகளை ஒளித்து வைத்துக் கொண்டு போய் படை வீரர்களின் தலைமையிடம் ஒப்படைப்பது வழக்கமாம்.

AFP

1944ஆம் ஆண்டு நாஸி படைகளிடமிருந்து பிரான்சை விடுவிப்பதற்காக போராடும் நோக்கில் ஏராளமான போர் வீரர்கள் வந்து இறங்கியிருக்கிறார்கள்.

வழக்கம்போல் முக்கிய செய்திகளை Marcel கொண்டு செல்லும்போது, எதிர்பாராத விதமாக இயந்திரத் துப்பாக்கி ஒன்று வெடிக்க, பல குண்டுகள் உடலில் துளைக்க, மண்ணில் சாய்ந்தான் Marcel.

பிரான்ஸ் விடுவிக்கப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன், ஆகத்து மாதம் 21ஆம் திகதி, Marcel ஏராளம் படைவீரர்கள் சூழ அடக்கம் செய்யப்பட்டுள்ளான். அவனது சவப்பெட்டியின்மீது பிரான்ஸ் கொடி சுற்றப்பட்டு Marcelக்கு மரியாதை செலுத்தியுள்ளனர் வீரர்கள்.

இப்போது Marcelஐ கௌரவிப்பதற்காக, Aixe-sur-Vienne என்ற இடத்திலுள்ள போர் நினைவிடத்தில், அவனது பெயர் இரண்டாம் உலகப்போரின் இளம் வயது ஹீரோ என்ற கௌரவத்துடன் பொறிக்கப்பட உள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்