பிரான்சில் 130 பேர் பலியான சம்பவம்! அணைக்கப்படும் ஈபிள் கோபுரம் விளக்குகள்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் நவம்பர் 13 தாக்குதலின் நினைவு நாளை நினைவு கோரும் வகையில் ஈபிள் கோபுரம் விளக்குகள் அணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் நாளை நவம்பர் 13 தாக்குதலின் ஐந்தாவது வருட நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட கோர தாக்குதல் காரணமாக 130 பேர் உயிரிழந்த நிலையில், 416 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் பிரான்ஸ் மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகையுமே உலுக்கியது.

இந்நிலையில், தற்போது இதை நினவுகூரும் வகையில், நாளை இரவு 8 மணியோடு ஈபிள் கோபுரம் விளக்குகள் அணைக்கப்படும் என்று பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ அறிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்