கொரோனா சிகிச்சைக்காக உலகுக்கே அடையாளம் காட்டப்பட்ட மருந்து தவறானது... மருத்துவர் மீது நடவடிக்கை: அதிரவைக்கும் தகவல்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் பிரேசில் அதிபர் போல்சனாரோ வரை, இது கொரோனா சிகிச்சைக்கு நல்ல மருந்து என பாராட்டிய ஒரு மருந்து, கொரோனா சிகிச்சையில் பலன் தரக்கூடியது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், அதை பரிந்துரை செய்த மருத்துவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பிரான்ஸ் நாட்டவரான பேராசிரியர் Didier Raoult என்பவர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் (hydroxychloroquine) என்ற மலேரியா சிகிச்சைக்கான மருந்து, கொரோனா சிகிச்சையில் பலன் தரக்கூடியது என தவறான தகவலை பரப்பியதாக அவரது சகாக்களே குற்றம் சாட்டியுள்ளார்கள்.

அவர் சொல்லியதை நம்பி அமெரிக்க அதிபர் ட்ரம்பும், பிரேசில் அதிபர் Jair Bolsonaroவும், ஹைட்ராக்சிகுளோரோகுயினைக் குறித்து பெரிய அளவில் பிரச்சாரம் செய்தார்கள்.

ஆனால், ஹைட்ராக்சிகுளோரோகுயினைக் கொண்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதால் பலன் இருப்பதாக எந்த ஆய்விலும் கண்டுபிடிக்கப்படவில்லை, சொல்லப்போனால், கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயினைக் கொண்டு சிகிச்சையளித்தால் ஏற்படும் பயங்கரமான பக்க விளைவுகளைக் கணக்கிட்டால், அதைவிட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல் இருப்பதே சிறந்தது என்கிறார்கள் விமர்சகர்கள்.

Christophe Simon/AFP/Getty Images

ஜூன் மாதத்தில், பிரித்தானிய மருத்துவர்கள் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கொரோனாவை குறைக்கும் வகையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் எதுவுமே செய்யவில்லை என்று கூறியிருந்தார்கள்.

எனவே, 500 மருத்துவர்கள் கொண்ட பிரான்சின் தொற்றுநோய் ஆய்வு அமைப்பு, Raoult மீது புகாரளித்துள்ளது.

அடுத்த ஆண்டு Raoult மருத்துவர்கள் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்.

உலகமே கொரோனா சிகிச்சையில் பயன்படக்கூடியது என நம்பிய ஒரு மருந்து குறித்து இப்படி வெளியாகியுள்ள செய்தி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்