தேவாலயங்கள் மீது தாக்குதல் நடப்பதை தடுக்க இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்: வெளியான புகைப்படம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு மூவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் கடும் அச்சத்துள்ளான நிலையில், கிறிஸ்தவர்களுக்கு உதவும் வகையில் இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல் ஒன்றைக் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரான்சில் முகமது நபியின் கேலிச்சித்திரங்களை வகுப்பில் காட்டியதற்காக ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டது.

மூவர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரான்சில் அனைத்து புனிதர் தினம் கொண்டாடப்பட்டபோது, Lodeve என்ற இடத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிற்கு காவலாக இஸ்லாமியர்கள் சிலர் தேவாலயம் ஒன்றின் முன் கூடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cathedral in பிரான்சில் Lodeve என்ற இடத்தில் அமைந்துள்ள Saint-Fulcran தேவாலயத்தின் முன், தேவாலயம் தாக்குதலுக்குள்ளாவதை தடுப்பதற்காகவும், தங்களுக்கு தேவாலயத்துக்கு செல்வோருடன் இருக்கும் ஒற்றுமையை உணர்த்துவதற்காகவும் ஒரு கூட்டம் பிரெஞ்சு இஸ்லாமியர்கள் கூடி காவலுக்கு நின்றார்கள்.

Alain Mendez via AP

அந்த தேவாலயத்திற்கு செல்லும் மக்கள் இந்த செயலால் நெகிழ்ச்சியடைந்ததோடு, அந்த தேவாலயத்தின் போதகர், இப்படி குழப்பம் நிலவும் ஒரு நேரத்தில் அவர்கள் செய்த செயல் நம்பிக்கையூட்டுவதாக இருப்பதாக தெரிவித்தார்.

பிரான்சில் ஒவ்வொரு முறை இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தும்போதும் தாங்கள் கடும் கவலையுற்றதாக தெரிவிக்கும் Benferhat என்பவர், பிரான்ஸ் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டது கொடூரமான செயல் என்று கூறுகிறார்.

அதைத் தொடர்ந்து Niceஇல் தாக்குதல் நடந்தபோது, நாம் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி மட்டும் செலுத்தினால் போதாது, நாமே களமிறங்கி அவர்களுக்காக எதையாவது செய்தாகவேண்டும் என தன் இஸ்லாமிய நண்பர் ஒருவரிடம் கூறியதாக தெரிவிக்கிறார். அதைத் தொடர்ந்துதான், தாங்கள் தேவாலயங்களை பாதுகாப்பது என முடிவு செய்ததாக தெரிவிக்கிறார் Benferhat.

இந்த விடயம் மொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், பலர் அது குறித்து ஒன்லைனில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

வலது சாரியினர் சிலர் தங்களை கடிந்துகொண்டாலும், 90 சதவிகிதம் மக்கள் நேர்மறையான கருத்துக்களை தெரிவித்திருப்பதாக தெரிவிக்கிறார் Benferhat.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்