பிரான்சில் ஊரடங்கு இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்? அரசு முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்
859Shares

பிரான்சில் வரும் டிசம்பர் மாதம் வரை ஊரடங்கு நீடிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 19.15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை முன்னிட்டு அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர் 30-ஆம் திகதி பொது முடக்கம் அறிவித்தது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தேசப் பாதுகாப்பு அடுத்த 15 நாட்களுக்கு மாற்றப்படாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அதிபருடன் (இமானுவேல் மேக்ரான்) சேர்ந்து முடிவெடுத்துள்ளோம்.

இதன்படி, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊரடங்கு விதிகள் தொடர்ந்து நீடிக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் செய்தியில், கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்புக்கு பலியானோர் நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்பின் 2வது அலை கடுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்