பிரான்சில் துப்பாக்கி எந்திய நிலையில் வீட்டின் கதவை தட்டிய மர்ம நபர்! அதன் பின் நடந்த திக் திக் சம்பவம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் ஆயுதமேந்திய நபர் ஒருவர் கைகளின் துப்பாக்கி ஒன்றை வைத்துக் கொண்டு, வீட்டின் கதவை தட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Nancy நகரின் rue Vayringe வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் கடந்த சனிக்கிழமை, உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு ஆயுததாரி நுழைய நினைத்து, கையில் துப்பாக்கியை பிடித்த நிலையில் வீட்டின் கதவை தட்டியுள்ளான்.

இதை அறிந்த் வீட்டின் உள்ளே இருந்தவர்கள் அதிர்ச்சியில் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு BAC அதிகாரிகள் விரைந்து வந்துள்ளனர்.

அப்போதும், அந்த ஆயுததாரி அங்கேயே தொடர்ந்து நின்றுள்ளான். இதனால் அதிகாரிகள் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு சரணடையும் படி கேட்க, ஆனால் அவன் அதை கேட்கவில்லை.

இதனால் பொலிசார் மற்றும் அதிகாரிகள், ஆயுததாரி மீது, பாய்ந்து அவனை மடக்கிபிடித்தனர். இதன் காரணமாக அங்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை, இருப்பினும் பொலிசார் அந்த ஆயுததாரி என்ன நோக்கத்திற்காக இப்படி துப்பாக்கியுடன் வந்து வீட்டின் கதவை தட்டினான் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்