பிரான்சில் கணவரின் நினைவு நாளில் மயானத்திற்கு சென்ற மனைவிக்கு நடந்த துயர சம்பவம்!

Report Print Santhan in பிரான்ஸ்
654Shares

பிரான்சில் பெண் ஒருவர் சவக்குழிக்குள் மாட்டிக் கொண்டு தப்பிக்க போராடிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

பிரான்சின் Troyes (Aube) நகரில் வசிக்கும் 77 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது கணவரின் இழப்பில் நீண்ட வருடங்கள் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை கணவரின் நினைவு தினம் என்பதால் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணி அளவில் மலர்கொத்துகளோடு அவர் தனது கணவர் புதைக்கப்பட்டிருந்த மயானத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கு மனைவியின் பாரம் தாங்காமல் கணவரது நினைவு கட்டிடம் உடைந்ததால், 77 வயதுடைய மனைவி சுமார் 3 மீற்றர் ஆழம் கொண்ட சடலம் புதைக்கப்பட்டிருந்த குழிக்குள் விழுந்துள்ளார்.

யாரும் இல்லா மயானத்தின் அவர் குழிக்குள் விழுந்ததை எவரும் கவனிக்கவில்லை. இதனால் அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கத்தியுள்ளார்.

அருகில் வசிப்பவர்கள் இந்த குரலை கேட்டபோதும், முதலில் அது வீதியில் இருந்து வருவதாக நினைத்துக் கொள்ள, மறுநாள் காலையிலும் அந்த சத்தம் தொடர்ந்த போது தான், இது மயானத்தில் இருந்து வருகிறது என்பதை உணர்ந்து மறுநாள் காலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மயானத்துக்கு வந்த தீயணைப்பு படையினர், மூன்று மீற்றர் ஆழம் கொண்ட குழிக்குள் சிக்கியிருந்த அப்பெண்ணை காப்பாற்றினர். அவர் மிகுந்த காயமடைந்திருந்ததாகவும், சோர்வடைந்திருந்ததாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்