பிரித்தானிய மகாராணியாரைக் குறித்து திடுக்கிடவைக்கும் செய்தி: பிரான்ஸ் ரேடியோவின் தவறால் ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தவறுதலாக பிரித்தானிய மகாராணியாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரான்ஸ் ரேடியோ நிலையம் ஒன்று.

பிரான்ஸ் ரேடியோ நிலையம் ஒன்று தவறுதலாக உயிருடன் இருக்கும் பலருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளது.

அப்படி தவறாக இரங்கல் செய்தி வெளியிடப்பட்டவர்களில் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் Pele, அமெரிக்க நடிகரும் இயக்குநருமான Clint Eastwood, பிரெஞ்சு நடிகையான Brigitte Bardot ஆகியோருடன் பிரித்தானிய மகாராணியாரின் பெயரும் அடங்கும்.

தொழில்நுட்பக்கோளாறு ஒன்றின் காரணமாக இந்த தவறு நிகழ்ந்துவிட்டதாக அந்த வானொலி நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நடந்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளது பிரான்ஸ் சர்வதேச வானொலி நிலையம்!

PA MEDIA

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்