பிரான்ஸ் ஜெட்மேன் மரணம்! உலகையே வியக்க வைத்த சாகச நாயகனுக்கு துபாயில் நேர்ந்த துயரம்

Report Print Basu in பிரான்ஸ்

தனது சாகசத்தால் உலகையே வியக்க வைத்த பிரான்ஸ் ஜெட்மேன் Vincent Reffet மரணமடைந்ததாக ஜெட்மேன் துபாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரான்ஸை சேர்ந்த மிகவும் திறமையான தடகள வீரரான Vincent Reffet, ‘ஜெட்மேன் துபாய்’ நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

வாழ்க்கையில் ஏராளமான சாகசங்களை நிகழ்த்தியுள்ள 36 வயதான Vincent Reffet, உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் இருந்து BASE-jumping செய்து மிகவும் பிரபலமானார்.

Vincent Reffet மரணம் குறித்து ஜெட்மேன் துபாய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துபாயில் நடைபெற்ற பயிற்சியின் போது Vincent Reffet பலியானதாக அறிவித்துள்ளது.

எனினும், என்ன நடந்தது என்பது குறித்த மேலதிக தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை. Vincent Reffet மரணம் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்