கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதுதான், ஆனால்... பிரான்ஸ் நாட்டு நிபுணர் தெரிவித்துள்ள எச்சரிக்கை செய்தி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
1111Shares

கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்று கூறியுள்ள பிரான்ஸ் நாட்டு தடுப்பூசி நிபுணர் ஒருவர் கூடவே எச்சரிக்கை செய்தி ஒன்றையும் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற வைராலஜி துறை நிபுணரான Dr Marie-Paule Kieny, பிரான்ஸ் சுகாதார ஆய்வு நிறுவனமான Insermஇன் தலைமை ஆராய்ச்சியாளராவார்.

அத்துடன், உலக சுகாதார அமைப்பிலும் பொறுப்பு வகித்த அவர், அரசின் கொரோனா தடுப்பூசி அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.

பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த Dr Marie, 2021 துவக்கத்தில் பிரான்சில் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கும் என்றும், ஆனால், தடுப்பூசியால் கொரோனா வைரஸை முற்றிலுமாக அழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்று கூறியுள்ள Dr Marie, தடுப்பூசியால் கொரோனா வைரஸை முற்றிலுமாக அழிக்க முடியாது என்றும், ஆனால், சில மாதங்களுக்குள் கொரோனா நிலைமை நன்கு மேம்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

காலப்போக்கில் நிலைமை மாறும் என நம்புவதாக தெரிவித்துள்ள Dr Marie, நாம் கொரோனா வைரஸுடனேயே வாழ கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார்.

கை கழுவுதல் முதலான சுகாதார நெறிமுறைகள் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் கண்ணாரக்கண்டிருக்கிறோம் என்று கூறும் Dr Marie, அதுவும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்