பாதி எரிந்த சடலம்... நான் மட்டுமே பொறுப்பு: பிரான்சை உலுக்கிய கொடூர சம்பவத்தில் முக்கிய தீர்ப்பு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கொன்று உடலை நெருப்புக்கு இரையாக்கிய நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த பிரான்ஸ் மக்களையும் உலுக்கிய இச்சம்பவம் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்துள்ளது.

பிரான்சின் வடகிழக்கு நகரமான கிரே அருகே அமைந்துள்ள வனப்பகுதியில் இருந்து பாதி எரியூட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் மாயமானதாக கணவரால் புகார் அளிக்கப்பட்டிருந்த 29 வயதேயான Alexia Daval என்பவரது சடலம் அது என உறுதி செய்யப்பட்டது.

ஜாகிங் சென்றவர் குடியிருப்புக்கு திரும்பவில்லை என கணவர் Jonathann Daval அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்த பொலிசாருக்கு, அவர் மீதே சந்தேகம் எழ,

இறுதியில், தமது மனைவியை தாமே அடித்துக் கொன்றதாகவும், பின்னர் உடலை நெருப்புக்கு இரையாக்கியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

சனிக்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வாசித்தபோது 36 வயதான Jonathann Daval உணர்ச்சியற்ற நிலையில் காணப்பட்டார்.

மட்டுமின்றி, மனைவியின் பெற்றோரை காண நேர்ந்த ஒரு நொடி, அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.

இது குடும்ப வன்முறை வழக்கு என வாதிட்ட சட்டத்தரணிகள், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க கோரிக்கை வைத்தனர்.

Alexia Daval மாயமானதாக புகார் அளிக்கப்பட்ட இரண்டாவது நாள் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் கிரே பகுதி மக்களை உலுக்கியதுடன், சுமார் 10,000 பொதுமக்கள் ஒன்று திரண்டு, Alexia Daval-ல் மரணத்திற்கு நீதி வேண்டும் என ஊர்வலம் மேற்கொண்டனர்.

மட்டுமின்றி, பிரான்ஸ் முழுவதும் முக்கிய நகரங்களில், ஜாகிங் செல்லும் பெண்களை ஆதரித்து, பலர் பெருமை செய்தனர்.

இந்த வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட Jonathann Daval தாம் நிரபராதி என கண்கலங்கியபடி மனைவியின் உறவினர்கள் மத்தியில் ஊடகங்களை சந்தித்தார்.

ஆனால், அடுத்த 3 மாதங்களில் Jonathann Daval குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன், இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை எனவும், தாம் மட்டுமே பொறுப்பு எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்