பிரான்சை உலுக்கிய சம்பவம்! குற்றவாளிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை: இது நல்ல தீர்ப்பு என தாய் நெகிழ்ச்சி

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் மனைவி காணமல் போய்விட்டதாக கணவன் கூறி வந்த சம்பவத்தில், கணவனே குற்றவாளி என தெரியவர நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரான்ஸை சேர்ந்த Jonathan Daval என்பவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தன்னுடைய மனைவி காணமல் போய்விட்டதாக கூறியிருந்தார்.

அதன் பின் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருடைய மனைவியின் சடலம் வனப்பகுதி ஒன்றில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த சம்பவம் பிரான்ஸையே உலுக்கிய நிலையில், இது குறித்து பொலிசார் வழக்கினை தீவிரப்படுத்தினர். அப்போது மனைவியான Alexia(29)-வை நான் தான் கொலை செய்தேன் என்று குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

(Image: AFP via Getty Images)

அவரை அங்கு கொண்டு சென்று எரிப்பதற்கு முன்பு கழுத்தை நெரித்து அடித்து கொலை செய்ததாகவும், கூறியுள்ளார்.

உயிரிழந்த Alexia-வின் சடலம் கடந்த 2017-ஆம் ஆண்டு பிரான்சில் கிரே-லா-வில்லே நகரத்திற்கு அருகிலுள்ள பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதலில் அவர் தன்னுடைய மனைவி ஜாக்கிங்கிற்காக சென்ற போது, அவர் வீடு திரும்பவில்லை என்று பொய் சொல்லி தப்ப முயன்றார்.

இருப்பினும் கொலை நடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார், கடுமையான வாக்குவாதத்தின் போது அவர் தனது மனைவியைத் தாக்கியதாகவும், ஒரு கான்கிரீட் சுவரில் அவரை அடித்து தள்ளியாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், அவருக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

(Image: AFP via Getty Images)

இந்த தண்டனை குறித்து Alexia-வின் தாயார் கூறுகையில், இது ஒரு நல்ல தீர்ப்பு தான், நாங்கள் எதிர்பார்த்தது போலவே வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த கொடூர கொலை தொடர்பான விசாரணையின் போது, Alexia நினைவாக அமைதியான அணி வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும், 125,840 பெண்கள் வீட்டு வன்முறைக்கு ஆளானதாக பிரான்ஸ் அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்