பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் முக்கிய தகவல்! சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் பிரான்ஸில் தற்போது வரை பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக ஒவ்வொரு நாளும் நாட்டில் மரணம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இருப்பினும் கொரோனா ஊரடங்கு தளர்வு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.

ஆனால், இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இமானுவேல் மேக்ரான் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.

அதில், குறிப்பாக, சந்தேகம் நம் எல்லையில்லா அசத்திற்கு வழி வகுக்கும். எனவே ஒழுக்கான திட்டமிடல் கண்டிப்பாக வேண்டும்.

நாம் எதை செய்யப் போகிறோம், அதை எவ்வாறு செய்யப் போகிறோம் என்பதில் தெளிவானதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், கொரோனா ஊரடங்கு தளர்வு மூன்று கட்டங்களாக அறிவிக்கப்படும், அதில், முதற்கட்டமாக, டிசம்பர் முதலாம் திகதி வரத்தக நிலையங்கள் திறப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படும். சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் இவை எல்லாம் இயங்க ஆரம்பிக்கும்.

இரண்டாம் கட்டமாக, வருட இறுதி விடுமுறைகள் கொண்டாட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வழங்கப்படும்.

மூன்றாம் கட்டமாக, கொரோனத் தொற்றின் நிலைமை அவதானிக்கப்பட்டு, அதன் பின்னர் ஜனவரி ஆரம்பத்தில் இருந்து உணவகங்கள், மதுச்சாலைகள், தேநீர் வடுதிகள் திறப்பது பற்றி அறிவிக்கப்படும் என்று மேக்ரான் கூறியுள்ளார்.

இதனால் மக்களுக்கு நிலவு வந்த சந்தேகங்களுக்கு மேக்ரான் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்