பிரான்சில் இஸ்லாமிய மத போதகருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு! என்ன தவறுக்காக தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் இஸ்லாமிய மத போதகர் ஒருவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் Villiers-le-Bel (Val-d'Oise) நகரைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகருக்கே நேற்று இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த இவர், சமூகவலைத்தளங்களில் தொடர்ச்சியாக சில காணொளிகளை பதிவேற்றி வந்துள்ளார். அவை, இஸ்லாமிய பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

குறிப்பாக தனது காணொளிகள் மூலம் சார்லி- எப்தோ பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானியரே புறப்பட்டு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.

இதையடுத்து, நீண்ட நாட்கள் நடந்த விசாரணைக்கு பின்னர் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 18 மாதங்கள் சிறை தண்டனை பெறும் அவர், பிரான்சின் குடியுரிமை நிராகரிக்கப்பட்டு, பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படவுள்ளார்.

இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு Villiers-le-Bel நகரில் உள்ள பள்ளிவாசலில் மத போதகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்