பிரான்சில் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் படிக்கட்டு விற்பனைக்கு! எவ்வளவு விலை எதிர்பார்க்கபடுகிறது தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்
417Shares

பிரான்சில் புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தின் படிக்கட்டு ஏலத்திற்கு வரும் 1-ஆம் திகதி விடப்படவுள்ளது.

உலகில் புகழ்பெற்றவைகளில் ஒன்றான ஈபிள் கோபுரத்தைப் பார்ப்பதற்கு பல்லாரயிக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

அந்தளவிற்கு இந்த ஈபிள் கோபுரம் மிகவும் பிரபலம். கடந்த 1889-ஆம் ஆண்டு இந்த கோபுரம் அமைக்கப்பட்ட போது, படிக்கட்டு ஒன்று விற்பனைக்கு வந்தது.

இரண்டாவது தளத்தில் இருந்து மூன்றாவது தளத்துக்கு ஏறுவதற்குரிய படிக்கட்டுகள் சிலவற்றை அகற்றி அதற்கு பதிலாக, 1983-ஆம் ஆண்டு மின்சார பாரம்தூக்கி அமைக்கப்பட்டது. அப்படி அகற்றப்பட்ட படிக்கட்டுகளில் ஒன்றே தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது.

ஈபிள் கோபுரத்தில் இருந்து அகற்றப்பட்ட படிக்கட்டுகளில் 20 படிக்கட்டுக்கள் முன்னதாகவே ஏலத்தில் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் நாளை மறுநாள் டிசம்பர் 1 ஆம் திகதி மீண்டும் ஒரு படிக்கட்டு ஏலம் விடப்படவுள்ளது.

இந்த படிக்கட்டின் உயரம் சுமார் 2.6 மீற்றர் எனவும், இதன் எதிர்பார்க்கப்பட்ட விலை 30,000 இருந்து 40,000 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்