முன்பு நடந்தது... இம்முறை அது நடக்காது: மீண்டும் பிரித்தானியாவை எச்சரிக்கும் பிரான்ஸ்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெக்சிட்டுக்கு பிந்தைய பேச்சுவார்த்தைகளில் பிரெஞ்சு மீனவர்களை ஒதுக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ள பிரான்ஸ் அமைச்சர் ஒருவர், ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் ஒப்பந்தம் ஒன்றை செய்வதிலிருந்து இன்னமும் தூரத்திலேயேதான் உள்ளன என்று கூறியுள்ளார்.

பிரித்தானியா, முன்பு தன் நாட்டுக்கே சாதகமான முடிவுகளையே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது, இம்முறை அது நடக்காது என எச்சரித்துள்ளார் பிரான்சின் ஐரோப்பிய விவகாரங்கள் துறை அமைச்சரான Clement Beaune.

எங்கள் நாட்டு மீனவர்கள் பிரித்தானிய மீனவர்களுக்கு கொஞ்சமும் குறைந்தவர்கள் அல்ல என்று கூறியுள்ள Beaune, பிரித்தானியர்களுக்கு வாக்களிப்பில் பங்கேற்க உரிமை இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள தவறினால், உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக விதிகளைத்தான் அனைவரும் பிறகு பின்பற்றவேண்டியிருக்கும். இதனால், எல்லைகளில் சுங்கச் சோதனைகள், உடனடி வரி விதிப்புகள் என பொருளாதார குழப்பம் நேரிடும்.

ஒரு நாடு மற்றொரு நாட்டின் சட்டத்தை தாழ்த்த இயலாது என சூசகமாக பிரித்தானியாவை சாடினார் அவர்.

மீன் பிடி உரிமைதான் இப்போது பிரச்சினையாக உள்ளது என பிரித்தனிய மாகாணங்கள் செயலர் Dominic Raab கூறியுள்ள நிலையில், பிரித்தானிய கடல் பரப்பில் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டாலொழிய ஒப்பந்தம் ஒன்றை செய்ய இயலாது என்கிறார் Beaune.

2021 ஜனவரி 1ஆம் திகதிக்குள் ஒப்பந்தம் ஒன்று நிறைவேறியாக வேண்டியுள்ள நிலையில், இன்னும் கொஞ்சம் காலம்தான் உள்ளது, இதே கருத்து பிரித்தானியாவுக்கும் இருக்கும் நிலையில், கடந்த சில வருடங்களில் செய்தது போல தனக்கே சாதகமான முடிவை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டால், இம்முறை அது நடக்காது என எச்சரித்துள்ளார் Beaune.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்