பிரான்ஸ் மசூதிகளில் திடீர் சோதனை: என்ன காரணம்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in பிரான்ஸ்
868Shares

பிரான்சில் தீவிரவாத சிந்தனைகளை போதிப்பதாக சந்தேககிக்கப்படும் சில மசூதிகளில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொள்ளவார்கள் என நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் கூறினார்.

நாட்டில் நடந்த பல தாக்குதல்களைத் தொடர்ந்து தீவிரவாதிகள் மீதான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக தீவிரவாத சிந்தனைகளை போதிப்பதாக என்று சந்தேகிக்கப்படும் மசூதிகள் மற்றும் பிரார்த்தனை அரங்குகளில் பிரான்ஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள்.

தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மசூதிகள் மற்றும் பிரார்த்தனை அரங்குகள் மூடப்படும் என்று டர்மனின் கூறினார்.

எந்த வழிபாட்டுத் தலங்கள் ஆய்வு செய்யப்படும் என்ற தகவல் வெளியிடவில்லை. பாரிஸ் பிராந்தியத்தில் 16, நாடு முழுவதும் 60 இடங்களில் சோதனை நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் சுமார் 2,600 முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களில் ஒரு பகுதியே தீவிரவாதக் கோட்பாடுகளைத் தூண்டுவதாக சந்தேகிக்கப்படுவதாக அமைச்சர் டர்மனின் கூறினார்.

பிரான்சில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் சட்டங்களை மதிக்கிறார்கள் மற்றும் தீவிரமயமாக்கலால் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்