பிரான்சில் 3 பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை... மர்ம நபர் வெறிச்செயல்! நடுங்க வைக்கும் பரபரப்பு சம்பவம்

Report Print Basu in பிரான்ஸ்
259Shares

பிரான்சில் பெண்னை மீட்க சென்ற பொலிசார் அதிகாரிகள் 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saint-Just பகுதிக்கு அருகிலுள்ள Puy-de-Dôme என்ற இடத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.

கணவர் தன்னை மிகவும் துன்புறுத்துவதாக பெண் ஒருவர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

சம்பவயிடத்திற்கு விரைந்த துணை இராணுவ பொலிஸ் அதிகாரிகள், வீட்டின் கூரையின் மேல் பிடித்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்க முயன்றுள்ளனர்.

இதன் போது பெண்ணின் கணவர் பொலிசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில், 3 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, அந்த நபர் வீட்டை தீ வைத்து கொளுத்தியதில் மொத்தம் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இக்கொடூர தாக்குதலில் ஈடுபட்ட நபர் பைத்தியம் என கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து Saint-Just மேயர் கூறியதாவது, சம்பவயிடத்தில் இன்னும் நடவடிக்கை தொடர்கிறது. சம்பவயிடத்திற்கு GIGN-ஐ சேர்ந்த 7 அதிகாரிகள் சென்றதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் சம்பவயிடத்திலிருந்து தப்பிச்சென்ற நிலையில் அவர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்