பாரீஸ் கவுன்சில் உறுப்பினர் ஒருவர், தனக்கு கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படும் 50,000 யூரோக்கள் ஊதியத்தை வேண்டாம் என்று மறுத்துள்ள ஆச்சரிய சம்பவம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து பாரீஸ் கவுன்சில் உறுப்பினராக பணியாற்றி வருபவர் Mr Casanova. கடந்த ஆறு மாதங்களுக்கான ஊதியமாக அவருக்கு 24,414 யூரோக்கள் ஊதியம் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், அவர் தனக்கு அந்த ஊதியம் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
இதற்கு முன் எந்த கவுன்சில் உறுப்பினரும் இப்படி செய்ததில்லை. இதற்கு முன்பும் பாரீஸில் பட்ஜெட் தொடர்பிலான வேலை ஒன்றை செய்ததற்கும் அவர் ஊதியம் பெற மறுத்துவிட்டிருக்கிறார்.
Mr Casanova தான் எதற்காக ஊதியம் வேண்டாம் என்பது குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், அவர் ஏற்கனவே ஒரு பெரிய நிறுவனத்தில் சட்டத்தரணியாக பணியாற்றி வருவதாகவும், அதிலேயே அவருக்கு பெரும் தொகை ஊதியமாகவும் கிடப்பதாகவும், அதனால்தான் இந்த ஊதியத்தை அவர் மறுத்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.