புலம்பெயர்ந்த முன்னணி கோவிட்-19 தொழிலாளர்களுக்கு பிரான்ஸ் அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்
229Shares

பிரான்சில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இந்த அதிக கோவிட் -19 அபாயங்களுக்கு இடையில் தங்களை சுகாதாரப் பணியில் ஈடுபடுத்திவருகின்றனர். இப்படி ஒரு சுகாதார நெருக்கடியின் போது அவர்களின் உறுதிப்பாட்டிற்காக விரைவாக தங்கள் குடியுரிமையைப் பெறுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் "தீவிரமாக பங்களித்த" மக்களை விரைவான முறையில் குடியுரிமையைப் பெரும் (fast-track naturalisation) விண்ணப்பிக்க அமைச்சகம் அழைத்தது.

அதற்கு பதிலளித்த கிட்டத்தட்ட 3,000 பேரில், 74 பேர் ஏற்கனவே குடியுரிமையைப் பெற்றுள்ளனர், மேலும் 693 பேர் இந்த செயல்முறையின் இறுதிக் கட்டத்தில் உள்ளனர் என்று குடியுரிமைக்கான ஜூனியர் மந்திரி மார்லின் ஷியாப்பா அலுவலகம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 22) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"சுகாதார வல்லுநர்கள், துப்புரவுப் பெண்கள், குழந்தை பராமரிப்பு தொழிலாளர்கள், செக்அவுட் ஊழியர்கள் என அவர்கள் அனைவரும் தேசத்துக்கான தங்கள் உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளனர், இப்போது அவர்களை நோக்கி ஒரு படி முன்னெடுப்பது குடியரசின் முறையாகும்" என்று அதில் குறிப்பிடப்பட்டது.

மேலும், வழக்கமாக குடியுரிமைக்குத் தேவையான 5 ஆண்டுகால வதிவிட காலத்தை (residency period), 2 ஆண்டுகளாகக் குறைக்க குடியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சுமார் 112,000 வெளிநாட்டினர் பிரெஞ்சு குடியுரிமையை வாங்கினர், இதில் 48,000க்கும் அதிகமானவர்கள் இயற்கைமயமாக்கல் (naturalisation) மூலம் பெற்றனர்- இது 2018ஆம் ஆண்டை விட 10 சதவீதம் குறைவு.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்