ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்த பெண்ணை தெரியுமா?: இவர்தான் அவர்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
242Shares

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்த பெண்ணை உங்களுக்குத் தெரியுமா?

உலகில் பலவகை மக்கள் இருக்கிறார்கள், பலதார மணம் செய்பவர்கள், தன் பாலினத்தவரை மணம் செய்பவர்கள் என... அதில் ஒருவகை, உயிரற்ற பொருட்களை மணந்துகொள்பவர்கள்! அப்படி உயிரற்ற பொருட்களால் ஈர்க்கப்படுதல் Objectum Sexuality என அழைக்கப்படுகிறதாம்.

அந்த வகையில் Erika LaBrie என்னும் அமெரிக்கப் பெண் ஒருவர் பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரத்தால் ஈர்க்கப்பட்டார்.

Image: DAILY MIRROR

2007ஆம் ஆண்டு ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்துகொண்ட Erika LaBrie, தன் பெயரை Erika La Tour Eiffel என்று மாற்றிக்கொண்டார், அதாவது பெண்கள் தன் பெயருக்குப் பின்னால் கணவர் பெயரை சேர்ப்பதுபோல், தன் பெயருக்குப் பின்னால் ஈபிள் கோபுரத்தின் பெயரை சேர்த்துக்கொண்டார் Erika.

இதனால் கடுமையான விமர்சனனக்களுக்குள்ளானார் Erika. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பின் ஈபிள் கோபுரத்துடனான உறவு முறிந்ததாக தெரிவித்த Erika, தன்னையும் ஈபிளையும் பிரிக்க ஊடகங்கள் முக்கிய பங்காற்றியதாகவும், ஆனாலும், தன் மனதில் இருக்கும் ஈபிளை அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் கூறியுள்ளார்.

Image: DAILY MIRROR
Image: DAILY MIRROR

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்