பிரான்சில் வீட்டிற்கான உதவித்தொகையில் புதிய மாற்றம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
713Shares

பிரான்சில் வாடகை குடியிருப்பாளர்கள் மற்றும் கடன் தொகை கட்டும் சொந்த வீட்டு உரிமையாளர்களிற்கு அவர்களின் வருமானத்தின் அடிப்படையில் CAF ல் வழங்கப்படும் வீட்டு உதவித்தொகையான APL-ன் கணக்கீடானது எதிர்வரும் ஜனவரி முதல் மாற்றமடைய உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடக்க இருந்த இந்த மாற்றமானது கொரோனா பெருந்தொற்றினால் ஒத்திவைக்கப்பட்டது.

இதுவரை வீட்டு உதவித் தொகையினைக் கணக்கிடுவதற்கு, இரண்டு வருட வருமானங்கள் கணக்கில் எடுக்கப்பட்டு கணக்கிடப்படு வந்துள்ளது.

ஆனால் எதிர்வரும் முதலாம் திகதி முதல், இறுதி 12 மாதத்தின் வருமானங்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டு இந்த வீட்டுதவித்தொகையானது கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமானம் அதிகரித்தால் உதவித்தொகை குறைந்தும், வருமானம் குறையும்போது உதவித்தொகை அதிகரித்தும் செல்லும்.

ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வருமானம் கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் வீட்டு உதவித்தொகை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்