பிரெக்சிட் மூலம் பிரித்தானியா தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறது! பிரான்ஸ் அதிரடி

Report Print Basu in பிரான்ஸ்
293Shares

பிரெக்சிட் மூலம் பிரித்தானியா தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறது என்று ஐரோப்பிய விவகாரங்களுக்கான பிரான்ஸ் அமைச்சர் Clement Beaune கூறியுள்ளார்.

டிசம்பர் 31 அன்று பிரெக்சிட்-க்குப் பின் இடைக்கால காலம் முடிவடைவதால் அன்றோடு இறுதியாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிந்து செல்லும்.

புதன்கிழமை பிரெக்சிட் வர்த்தக மற்றும் பிரித்தானியா உடனான ஒத்துழைப்பு குறித்து ஒப்பந்தம் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த வாரம் எட்டப்பட்டது.

இதையொட்டி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டப்பட்ட ப்ரெக்சிட்-க்கு பிந்தைய எதிர்கால கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

பிரத்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில், நிர்வாகம், பொதுவான விதிகள் மற்றும் மீன்பிடி உரிமைகள் தொடர்பான சர்ச்சை மூன்று முக்கிய அம்சங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரெக்சிட் மூலம் பிரித்தானியா தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் யாரையும் தண்டிக்கவில்லை என்றும், அதன் நலன்களைப் பாதுகாப்பது இயல்பு என்றும் ஐரோப்பிய விவகாரங்களுக்கான பிரான்ஸ் அமைச்சர் Clement Beaune கூறினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்