சீனா பக்கம் கவனத்தை திருப்புகிறதா ஐரோப்பா?: சீனாவை புகழ்ந்து தள்ளும் மேக்ரான்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
432Shares

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியுள்ள நிலையில், தங்கள் கசப்பை வெளிப்படுத்த ஐரோப்பா சீனா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளதோ என எண்ணத்தோன்றுகிறது பிரான்சின் நடவடிக்கைகளால்!

பிரான்ஸ் பக்கத்திலிருந்து கசப்பை உமிழும் மற்றும் வெறுப்பையூட்டும் சத்தம் கேட்கத்துவங்கியுள்ளது.

பிரெக்சிட் மூலம் பிரித்தானியா தன்னைத்தான் தண்டித்துக்கொள்கிறது என்று கூறியிருந்தார் பிரான்ஸ் அமைச்சர் ஒருவர்.

அவரது கருத்து சூடு ஆறுவதற்குள், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஐரோப்பாவுக்கும் சீனாவுக்குமிடையிலான பேச்சுவார்த்தை கடந்த சில ஆண்டுகளாக வலுப்பெற்றுள்ளது, சம நிலை அடைந்துள்ளது என்று கூறியுள்ள மேக்ரான், அது தொடர்கிறது என்றும் கூறியுள்ளார்.

AP

ஒரு காலத்தில் சீனா ஐரோப்பாவை காணாமல் போகச் செய்துவிடுமோ என்ற அச்சம் இருந்தது.

சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் உரசல்கள் அதிகமாகிக்கொண்டே வருவதாக எல்லாம் செய்திகள் வந்ததுண்டு.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இரு தரப்பு வர்த்தக உறவும் வலுப்பட்டு வருவது என்னவோ உண்மைதான்.

அத்துடன், வரும் மாதங்களில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுடன் சீனாவுக்கு செல்லவும் விருப்பம் தெரிவித்துள்ளார் மேக்ரான்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்