பிரான்சில் நாளை முதல் இது கட்டாயம் ஆரம்பம்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்
1062Shares

பிரான்சில் நாளை முதல் பள்ளிகள் கட்டாயம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஜோன் மிசேல் புளோங்கே உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, ஜேர்மனி போன்ற நாடுகள் உருமாறி வரும் புதிய கொரோனா வைரஸ் பரவலால், விடுமுறை நாட்கள் முடிந்தும், பள்ளிகள் திறப்பதை இன்னும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

குறிப்பாக பிரித்தானியாவில் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரான்சில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இது குறித்து கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer கூறுகையில், பிரான்சில் நாளை கட்டாயம் பள்ளிகள் ஆரம்பமாகும்.

பள்ளிகளில், சுகாதாரப் பாதுகாப்புப் முறைகள் தீவிரப்படுத்தப்பட்டு, அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு செல்வார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களிற்கிடையில் கொரேனாத் தொற்று வீதம், மிகவும் குறைவாகவே உள்ளதாகவும், அதற்காக மிகவும், கண்டிப்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்