ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நாமும் வெளியேற வேண்டும்: பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு புதிய தலைவலி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
1040Shares

பிரித்தானியாவைத் தொடர்ந்து பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என பிரான்சிலிருந்து எழும் குரல்கள் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

2020 டிசம்பர் 31 அன்று இரவு 11 மணிக்கு, பிரித்தானியா முழுமையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது Brexit என அழைக்கப்பட்டது.

இப்போது Frexit வேண்டும், அதாவது பிரித்தானியாவைத் தொடர்ந்து பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்ற குரல் பிரான்சிலிருந்தே ஒலிக்கத் துவங்கியுள்ளதால் மேக்ரான் கடும் அழுத்தத்திற்குள்ளாக்கியிருக்கிறார்.

2020ஆம் ஆண்டு, ஜூலை மாதம் பிரான்சில் துவக்கப்பட்ட Generation Frexit என்ற அமைப்பின் தலைவரான Charles-Henri Gallois, வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரித்தானியாவை புகழ்ந்துள்ளதோடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருப்பது குறித்து ஒரு குடியரசு என்ற முறையில், பிரான்ஸ் மக்களும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த 2021ஆம் ஆண்டு அனுமதிக்கும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவைப்போலவே பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது சாத்தியமே என எச்சரித்துள்ள அவர், அது விரும்பத்தக்கதும்கூட என்றும் கூறியுள்ளார்.

இந்த பயங்கர, செயலாற்ற விடாத, அழிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் அடுத்த நாடாக பிரான்ஸ் இருக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார் அவர்.ஏற்கனவே கொரோனாவால் நமக்கு பெரும் இழப்பு, இதில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வேறுநாம் பணம் கொட்டிக்கொடுக்கவேண்டியுள்ளது.

ஆகவே, முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது, நாமும் ஒரு வாக்கெடுப்பு நடத்துவோம், குடியரசை மதிப்போம், எதிர்கால பிரெஞ்சு மக்களுக்கு அது தேவை என்றும் கூறியுள்ளார் Gallois.

கடந்த ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பல சோதனைகளை சந்திக்கவேண்டியிருந்தது, மஞ்சளாடை போராட்டங்கள் துவங்கி, தன் இருக்கையை காப்பாற்ற அவர் பட்ட பாடுகள் ஏராளம்.

இந்நிலையில், பிரெக்சிட்டை கடுமையாக விமர்சித்தும் பிரித்தானியாவை கடுமையாக எச்சரித்தும் வந்த மேக்ரான், இந்த புதிய ஆண்டு துவங்கியதுமே துவங்கியுள்ள Frexit பிரச்சினையை எப்படி சமாளிக்கப்போகிறாரோ தெரியவில்லை!

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்