பிரான்சின் Dordogne பகுதியில் உள்ள மண்பாசிலாக்கில், நீண்ட நாட்கள் கழித்து கூட நினைத்த முன்னாள் பள்ளி நண்பர்கள் வித்தியாசமான முறையில் பார்ட்டி நடத்த திட்டமிட்டனர்.
அதற்காக, Netflixல் 2013 ஆண்டு வெளியான பிரபலமான Peaky Blinders தொடரின் கதாப்பாத்திரங்களை போல மாறுவேடமிட்டு வரும்படி பார்ட்டியை ஒருங்கிணைத்தவர் கூறியதையடுத்து, நண்பர்கள் அனைவரும் புத்தாண்டு தினத்தன்று மாலை ஒன்று கூடினர்.
புகழ்பெற்ற தொடரில் வருவது போலவே ஒவ்வொருவரும் துப்பாக்கிகளைக் கொண்ட கதாப்பாத்திரங்கள் போல வேடமிட்டு வந்திருந்தனர். அனால் அதில் ஒருவர் அவரது தந்தையின் வேட்டை துப்பாக்கியைக் கொண்டுவந்துள்ளார்.
ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் ஒரு தனி பண்ணை வீட்டில் இவர்களது பார்ட்டியும் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது.
அப்போது, நிஜ வேட்டை துப்பாக்கியைக் கொண்டிருந்த 27 வயது இளைஞர், தான் எடுத்து வந்த துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பட்டிருப்பது தெரியாமல், தனது சக நண்பரான தாமஸ் மீது விளையாட்டாக குறிவைத்துள்ளார்.
அப்போது, எதிர்ச்சியாக துப்பாக்கி சுடப்பட்டதில், சரியாக தாமஸின் இதயத்தில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவசர சேவைக்கு அழைக்கப்பட்டது, ஆனால் சில நொடிகளில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நீண்ட நாள் கழித்து கூடி நண்பர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடிய பார்ட்டி இறுதியில் சோகத்தில் முடிந்தது. மேலும், ஒற்றைப் பிள்ளையை இழந்த சோகத்தில் தாமஸின் பெற்றோர்கள் மனமுடைந்துள்ளனர்.
கூடிய நபர்கள் அனைவரும், இது அறியாமையால் நடந்த விபத்து என விசாரணையில் பொலிஸிடம் கூறியுள்ளனர்.
இருப்பினும், முழுவதும் லோட் செய்யப்பட அந்த துப்பாக்கியைச் சுட்ட நபர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.