பிரெக்சிட்டால் பிரான்ஸ் செல்லும் பிரித்தானியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்: தீர்வு என்ன?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
1158Shares

பிரித்தானியாவுக்கு சென்றுவிட்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு திரும்பும் பிரித்தானியர்கள் பிரெக்சிட்டால் புதுப்புது பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில், பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை பார்ப்போம்.

France Rights group என்ற அமைப்பைச் சேர்ந்த Kalba Meadows கூறும்போது, கடந்த வார இறுதியில், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவோரின் பாஸ்போர்ட்கள் முத்திரையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்கிறார்.

Schengen பகுதியின் 90 நாட்கள் விதி என்ற விதியின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு, குறிப்பாக Schengen பகுதியிலுள்ள நாடுகளுக்கு சுற்றுலாப்பயணிகளாக செல்பவர்கள், ஒவ்வொரு 180 நாட்களுக்கும் 90 நாட்கள் அங்கு செலவிடலாம் என்பதைக் குறிக்கும் வகையில் அவர்களது பாஸ்போர்ட்டில் எல்லை அதிகாரிகள் முத்திரையிடுவார்கள் ( passports stamped).

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்திலேயே வாழ்ந்து வரும் பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு திரும்பும்போது இப்படி முத்திரையிடப்பட்ட தேவையில்லை. ஆனால், பிரெக்சிட்டால் அதெல்லாம் மாறிவிட்டிருக்கிறது.

இப்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை செலவிடுவதற்காக பிரித்தானியாவுக்கு சென்றுவிட்டு பிரான்சுக்கு திரும்பிய பிரித்தானியர்களின் பாஸ்போர்ட்டில் அதிகாரிகள் முத்திரையிட்டுள்ளார்கள்.

அதாவது, இந்த பிரித்தானியர்கள் பிரான்சில் வாழிட உரிமம் பெற்றவர்கள், ஆனால், முத்திரையிடப்பட்டுவிட்டால், அவர்கள் சுற்றுலாப்பயணிகளைப்போல, 90 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சத்திலேயே நாட்களை செலவிடும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

France Rights group என்ற அமைப்பு, ஐரோப்பாவில் வாழும் பிரித்தானியர்கள் (British in Europe) என்ற அமைப்பின் ஒரு பகுதி என்பதால், இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்திடம் விளக்கம் கோரியுள்ளார் அந்த அமைப்பைச் சேர்ந்த Meadows.

இதற்கிடையில், பிரான்சிலுள்ள பிரித்தானிய தூதரகம் பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு உறுதியளிக்கும் செய்தி ஒன்றை அளிக்க முயற்சித்துள்ளது.

பிரான்சிலுள்ள பிரித்தானிய தூதரகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உங்கள் பாஸ்போர்ட் தவறுதலாகவோ, தேவையின்றியோ முத்திரையிடப்பட்டிருந்தாலும், பிரான்சில் உங்கள் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரித்தானிய தூதரகம் பிரெஞ்சு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

எனவே, தவறுதலாக பாஸ்போர்ட்களில் முத்திரையிடப்பட்டவர்கள் அச்சமடையவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்