நாயை அழைத்துச் சென்றவருக்கு கேட்ட சத்தம்... அருகிலிருந்த காருக்குள் கண்ட அதிரவைத்த காட்சி: பின்னணியில் ஒரு பயங்கர சம்பவம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
770Shares

பிரான்சில் நாயுடன் வாக்கிங் சென்ற ஒருவரின் கவனத்தை அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேனிலிருந்து வந்த சத்தம் ஈர்க்க, அருகில் சென்று பார்த்துள்ளார் அவர்.

அந்த வேனுக்குள் ஒரு பெண்மணி கைகால்கள் கட்டப்பட்டு வாய்க்குள் துணி அடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்த அவர் உடனே அந்த பெண்மணியை மீட்டுள்ளார். அந்த பெண்ணின் பெயர் Jacqueline Veyrac (80).

அவர் ஒரு சாதாரண பெண் அல்ல, அவர் பிரான்சின் புகழ்பெற்ற Cannes என்ற இடத்திலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹொட்டலின் உரிமையாளரான ஒரு கோடீஸ்வர பெண்மணி.

நடந்தது என்னவென்றால், Jacquelineக்கு பிரான்சின் Nice என்ற இடத்திலும் ஒரு உணவகம் உள்ளது. அந்த உணவகத்தின் மேலாளராக Giuseppe Serena (67) என்பவர் இருந்துள்ளார்.

அவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார் Jacqueline. அந்த நபர்தான், Philip Dutton என்ற பிரித்தானிய ராணுவ வீரர், மற்றும் Enrico Fontanella என்ற தனது நண்பருடன் சேர்ந்து, உள்ளூர் குற்றவாளிகளுடன் சேர்ந்து Jacquelineஐக் கடத்தியுள்ளார்.

Jacquelineஐ மிரட்டி பெருந்தொகை ஒன்றைப் பறித்து உணவகம் ஒன்றைத் துவங்குவது Giuseppeஇன் திட்டம்.

அதன்படி Jacqueline கடத்தப்பட்டு கைகால்கள் கட்டப்பட்டு, வாய்க்குள் துணி அடைக்கப்பட்டு வேன் ஒன்றிற்குள் அடைக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் இருந்திருக்கிறார்.

இரண்டாவது நாள் கடத்தல்காரர்கள் வேனை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு எங்கோ செல்ல, Jacqueline தன் கைக்கட்டை அவிழ்த்துவிட்டு வேனின் உள்பக்கத்தை பலமாக தட்டியிருக்கிறார்.

அப்போது அவ்வழியே நாயுடன் சென்ற ஒருவர், அந்த சத்தத்தைக் கேட்டு அவரைக் கண்டுபிடித்து காப்பாற்றியிருக்கிறார்.

இந்த வழக்கில் இன்று Jacqueline சாட்சியமளிக்க உள்ள நிலையில், வழக்கு விசாரணை இம்மாதம் 29ஆம் திகதிவரை தொடரும் என தெரிகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்