பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோனின் மனைவி குறித்து வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in பிரான்ஸ்
1062Shares

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோனின் மனைவிக்கு டிசம்பர் இறுதியில் கொரோனா உறுதியானதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இரண்டாவது சோதனையில் கொரோனா இல்லை என முடிவு வந்த பிறகு அவர் இயல்புநிலைக்கு மீண்டும் திரும்பினார் என தெரிவித்துள்ளன.

டிசம்பர் 24 அன்று Brigitte Macron-க்கு கொரோனா உறுதியானது.

அவருக்கு எந்த பெரிய அறிகுறிகளையும் காட்டவில்லை, பின்னர் டிசம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு சோதனைகளை மேற்கொண்டதாகவும் அதில் கொரோனா இல்லை என உறுதியானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டிசம்பர் 17 அன்று பிரான்ஸ் ஜனாதிபதி மாக்ரோனுக்கு கொரோனா உறுதியானது, மேலும் டிசம்பர் 24 ஆம் தேதி அடுத்தடுத்த சோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்பதைக் காட்டும் வரை சுய-தனிமையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்