பிரான்சில் இந்த நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்! கடும் அச்சத்தில் மக்கள்

Report Print Santhan in பிரான்ஸ்
577Shares

பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வரு உருமாறிய கொரோனா வைரஸ் இப்போது, பிரான்சின் லில் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை இன்னும் கட்டுப்படுத்தாத நிலையில், பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தீவிரமாக பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் கடுமையான நடவடிக்கைகள் அங்கு உள்ளன.

இந்நிலையில், மிகவும் மோசமான தொற்றை ஏற்படுத்தும், பிரித்தானிய வைரசின் தொற்றானது, லில் நகரத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கு இரண்டு பேரிற்கும், பிரித்தானிய வைரசின் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என Hauts-de-France இன் பிராந்திய சுகாதார நிறுவனமான, ARSஇன் பொது இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் செய்யப்பட்ட இந்தக் கொரோனாப் பரிசோதனையின் பெறுபேறுகள் மீளாய்வு செய்யப்பட்டதில், இரண்டு பேரிற்குப் உருமாறிய வைரஸ் லில் நகரத்தில் உள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பெல்ஜியம் எல்லைக்கு அருகாமை நகரமான லில் நகரம் அச்சத்தில் உள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்