பிரான்சில் நோயாளிகளுக்கு போடப்படும் கொரோனா தடுப்பூசி விவரங்கள் அறிவிக்கப்படுமா? சுகாதார அமைச்சர் விளக்கம்

Report Print Santhan in பிரான்ஸ்
126Shares

பிரான்சில் கொரோனா நோயாளிகளுக்கு போடப்படும் தடுப்பூசி விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகின் ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் போடப்பட்டு வருகிறது.

ஆனால், பிரான்சில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படுவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது பிரான்ஸ் அரசு, கொரோனா தடுப்பூசி போடப்படும் விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட தீர்மானித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, தினமும் மாலை 7.30 மணி அளவில் அன்றைய நாளுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்களை அரசு வெளியிடும் என நேற்று சுகாதார அமைச்சர் Olivier Véran அறிவித்துள்ளார்.

இந்த விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக காட்சிப்படுத்தப்படும் என உறுதியாக கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்