ஜூன் மாதம் வரை மருத்துவ அவசர நிலையை நீட்டிக்கும் பிரான்ஸ்: அதன் பொருள்?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
244Shares

பிரான்ஸ் நாடாளுமன்றம், ஜூன் மாதம் 1ஆம் திகதி வரை மருத்துவ அவசர நிலையை நீட்டிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

மருத்துவ அவசர நிலையை நீட்டித்தல் என்பதன் பொருள் என்ன? 2020ஆம் திகதி, கொரோனா பரவல் காரணமாக முதல் முறை மருத்துவ அவசர நிலையை பிறப்பித்தது பிரான்ஸ், அது ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை அமுலில் இருந்தது.

ஜூலை மாதம், நாட்டில் கொரோனா பரவல் நிலை முன்னேற்றம் அடைந்ததால், அதற்குப் பின் மருத்துவ அவசர நிலையை நீட்டிக்கத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது.

ஆனால், மீண்டும் கொரோனா நிலைமை மோசமாகவே, அக்டோபர் மாதம் 17ஆம் திகதி, 2021 பிப்ரவரி 16 வரை மீண்டும் மருத்துவ அவசர நிலையை அறிவிப்பது என முடிவாயிற்று. இப்போதிருக்கும் சூழலில், ஜூன் வரை அது நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரி, இந்த மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்படுகிறது என்பதன் பொருள் என்ன? மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்படுகிறது என்றால், அதனால் அது மக்களின் அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்று பொருள் அல்ல, மருத்துவ அவசர நிலை என்பது அரசாங்கத்துக்கு அதிக அதிகாரத்தை அளிப்பதாகும்.

அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அரசு பொதுமுடக்கம் போன்ற முடிவுகளை எடுக்க முடியும்.

ஒவ்வொரு முடிவையும் நாடாளுமன்றம் முன் கொண்டு சென்று விவாதித்து பின் முடிவெடுப்பதற்கு பதிலாக, அரசால் உடனடியாக முடிவுகளை எடுக்கமுடியும். அதேபோல், ஜூன் மாதம் வரை மருத்துவ அவசர நிலை அமுலில் இருப்பதால், ஊரடங்கு, மதுபான விடுதிகள் மூடல் போன்ற கட்டுப்பாடுகளும் அமுலில் இருக்கும் என்றும் பொருளல்ல!

அரசு, தேவையானது என கருதும் கட்டுப்பாடுகளை விதிக்க இந்த மருத்துவ அவசர நிலை அதிகாரம் அளிக்கும், அவ்வளவே!

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்