மாஸ்குகள் தொடர்பில் பிரான்ஸ் தன் குடிமக்களுக்கு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
231Shares

பிரான்ஸ் மாஸ்குகள் தொடர்பில் தன் குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொது இடங்களில் துணியாலான மாஸ்குகளை அணிவதற்கு பதிலாக மக்கள் மருத்துவமனையில் பணிபுரிவோர் பயன்படுத்தும் மாஸ்குகளை (surgical masks) அணியுமாறு பிரான்ஸ் அரசு பரிந்துரை செய்துள்ளது.

அவை துணி மாஸ்குகளைவிட கொரோனா பரவலிலிருந்து சிறந்த பாதுகாப்பு தரும் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Olivier Veran தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரான்சில் பொது இடங்களில் மாஸ்க் அணிதல் கடாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், என்ன வகை மாஸ்க் அணிவது என்பது குறித்து இதுவரை எந்த பரிந்துரையும் செய்யப்படவில்லை.

தற்போது பிரான்ஸ் அதிகாரிகள், புதிய திடீர் மாற்றம் பெற்ற எளிதில் பரவும் கொரோனா வைரஸ்கள் மக்களைத் தாக்கக்கூடும் என அஞ்சுகிறார்கள்.

ஆகவே, இனி பிரான்ஸ் நாட்டு மக்கள் துணி மாஸ்குகளை பயன்படுத்தவேண்டாம் என தான் பரிந்துரை செய்வதாக சுகாதார அமைச்சர் Olivier Veran தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்