பிரான்சில் மீண்டும் தேசிய ஊரடங்கு! புதன்கிழமை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Ragavan Ragavan in பிரான்ஸ்
0Shares

பிரான்சில் கொரோனா வைரஸின் புதிய வகைகள் புழக்கத்தில் இருப்பதால் கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க அரசாங்கம் புதன்கிழமை கூடுகிறது.

பிரான்ஸ் மூன்றாவது பூட்டுதலை நோக்கி செல்கிறது. தடுப்பூசிகள் போட ஆரம்பித்த போதிலும், அதிகரித்துவரும் பாதிப்புகளும் மற்ற ஆபத்தான அறிகுறிகளும் சுகாதார அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளன.

பிரான்ஸ் அரசு கடந்த ஜனவரி 16 முதல் , தினமும் மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியது.

இருப்பினும், கடந்த 7 நாட்களும் தினமும் சராசரியாக 20,000 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகிவருகின்றன. இதற்கு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ்களின் பரவலும் காரணமாகும்.

முன்னதாக மாணவர்ககளைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் இயக்கப்படுவதற்காக மூன்றாவது தேசிய பூட்டுதலை அமல்படுத்துவதை அதிகாரிகள் இதுவரை எதிர்த்துவந்தனர்.

ஆனால், நிலைமை மேலும் மோசமடைந்துவிட்டால் "தாமதமின்றி" கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் விதிமுறைகளை கடுமையாக்கவில்லை என்றால், மார்ச் நடுப்பகுதியில் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து முக்கிய முடிவுகளை எடுக்க ஆலோசனைக் குழு வரும் புதைக்கிழமை கூடுகிறது. அதில், வரும் பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து மூன்றாவது தேசிய பூட்டுதலை அறிவிக்க முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்