பிரான்சில் வெளிநாட்டுச் சிறுவனை துவம்சம் செய்யும் இளைஞர்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு வீடியோ

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 10 இளைஞர்கள் சேர்ந்து வெளிநாட்டுச் சிறுவன் ஒருவனை அடித்து துவம்சம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Yuri Khruchenyk (15) என்ற அந்த வயது பள்ளி மாணவன் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவன். வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஈபிள் கோபுரத்துக்கு அருகே, சுமார் 10 இளைஞர்கள் Yuriயை சூழ்ந்துகொண்டு அடித்து உதைப்பதைக் காணமுடிகிறது.

இரும்புக் கம்பிகள், கத்தி முதலானவற்றைக் கொண்டு தாக்கப்பட்டதில் Yuriயின் மண்டையோடு உடைந்துள்ளது, விலா எலும்புகள், கைகள் உடைந்துள்ளதுடன், கத்திக்குத்துக் காயங்களும், கண்ணில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, Yuri கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வெளிநாட்டுச் சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரான்சுக்கான உக்ரைன் தூதரான Vadim Omelchenko, சம்பவத்தைக் கண்ட யாராவது இருந்தால் சாட்சியமளிக்க வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிகாரிகள், இதுவரை தாக்குதலில் ஈடுபட்ட யாரும் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், கிடைத்துள்ள வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வழக்கில் முக்கிய திருப்பம் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்