குழந்தையை அடித்துக்கொன்ற நபர்... அழைப்பில் இருப்பதை கவனிக்காமலே கொலையை மறைக்க திட்டமிட்ட தம்பதி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares

குழந்தையை அடித்துக்கொன்ற நபரும், அவரது காதலியும், தாங்கள் தொலைபேசி அழைப்பில் இருப்பதை கவனிக்காமலேயே உண்மையை மறைக்க முயன்றதைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

பிரான்சிலுள்ள Reims என்ற நகரில் வாழும் Caroline Létoile (19) என்ற பெண்ணின் குழந்தையை, அவரது புதுக் காதலனான Loïc Vantal (28) தாக்கியதில், குழந்தை நினைவிழந்துள்ளது.

அவசர உதவியை அழைத்து, குழந்தை நினைவிழந்துவிட்டதாக தெரிவித்த Caroline, தான் தொலைபேசி அழைப்பில் இருப்பதை கவனிக்காமலேயே, குழந்தையை தன் காதலன் தாக்கியதை மறைப்பது குறித்து ஆலோசனை செய்துள்ளார்.

ஆனால், தனது அழைப்பு பதிவு செய்யப்படுவதை அவர் அறியவில்லை. குழந்தை படியில் இருந்து விழுந்துவிட்டான் என மருத்துவ உதவிக் குழுவிடம் கூறியிருக்கிறேன் என்று Vantalஇடம் கூறும் Caroline, படிக்கட்டுகள் ஓகேவா?, அபார்ட்மெண்டுக்கு செல்லும் படிக்கட்டுகளிலிருந்து அவன் விழுந்துவிட்டான், நமக்குள் நடந்த விவாதங்களை எல்லாம் நான் மறைத்துவிடுகிறேன் சரிதானே, என்றும் கூறுவது பதிவு செய்யப்பட்டுவிட்டது.

AFP

மருத்துவ உதவிக்குழுவினர் பொலிசாருடன் வந்தபோது, 3 வயதான குழந்தை Tony பேச்சு மூச்சில்லாமல் கிடந்துள்ளான்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Vantalஐ பொலிசார் முறைப்படி விசாரித்தபோது, தான் அடித்ததில்தான் குழந்தை இறந்துபோனது என்பதை ஒப்புக்கொண்டார் அவர்.

நீதிபதி, Carolineஇடம், Vantal குழந்தையை தாக்கியதை ஏன் பொலிசாரிடம் தெரிவிக்கவில்லை என்று கேட்டபோது, எனக்கு பயமாக இருந்தது, உதவி கோர விரும்பினேன், ஆனால், என்னால் முடியவில்லை என்று கூறினார்.

Vantalக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள நீதிமன்றம், குழந்தை மீதான தாக்குதலை மறைத்ததற்காக Carolineக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்